கவி இல (103) 25/05/23
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்
தமிழின கல்வியறிவின் ஆதாரம்
தீ மூட்டி எரித்ததனால் சேதாரம்
தமிழின அழிப்பின்அடையாளம்
தீயில் பொசுங்கிய கருவூலம்
மொழி அழிந்தால்
இனமும் அழிந்திடும் என
நினைத்த வெறியரின்
கற்பனை சுக்குநூறாய் சிதற
தமிழன் தலை நிமிர்ந்தான்
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்போல
வேண்டும் மீண்டும் நூலகமென
அறிஞர்கள் கலைஞர்கள் பலத்தோடு
ஆண்டுகள் நாற்பது கடக்க
சாம்பலில் பூத்த மலரென
புதுப் பொலிவுடன் நிமிருது
பிரமிப்பாய் பிரமாண்டமாய்
யாழ்பொது நூலகம்
மதங்களைக் கடந்து
மொழியை முன்னிறுத்த
தமிழ்த்தாய் சிலைக்குப் பதிலாய்
கல்வித் தாய் சரஸ்வதியின் உதயம்
நூலகத்திற்கே பெருமை சேர்க்குது
நன்றி வணக்கம்.