வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 23/11/22
தலை நிமிர வாழ்ந்தோர்க்காய்
நம் தலை சாய்ப்போம்.

புழுதியும் குருதியும் தழுவிய தேசம்
ஈழத் தாய் மண்ணின் சோகம்
மாற்றம் கேட்டு நிற்கும் மறத் தமிழர்

புரட்சியின் வித்துக்களாய்
அழுத்தத்தின் உதறல்களாய்
அடிமை மண்ணை மீட்டெடுக்க
குல மாதர் மானம் காக்க

அடிமைப் பூட்டுடைக்க
விடுதலை வேட்கை கொண்டு
அக்கினிப் பறவைகளாய்
கடமையில் உயர்ந்த கர்ம வீரர்கள்

அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
மண் காக்க மனிதம் நிமிர
தம்முயிரீந்த மண்ணின் மைந்தர்கள்

தியாக தீபங்களை எம் நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை கரங்களில் ஏந்தி
மனிதம் நிமிர தம் தலை சாய்த்த
மா வீரர்களுக்காய் எம் தலை சாய்ப்போம்
அஞ்சலிப்போம் வீர வணக்கங்களுடன்
நன்றி