வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (100) 26/04/23
வளர்ந்த குழந்தைகள் தாமே

பாமுகத் தோட்டத்திலே
அழகிய மலர்களாய்
பருவத்திலே எழிலும்
குழந்தைக் குறும்பும்
இணைந்து வளர்ந்த குழந்தைகள்

சிந்தையிலே ஞாபகங்கள்
சீர்திருத்த செதுக்கல்கள்
பெரியோர் சிறியோர் பேதமின்றி
ஒன்றிணைந்த பறவைகள்

இசைக்கும் உற்சாக கானங்கள்
இவர்கள் வாழ்க்கைக்கான
நம்பிக்கைக் கீதங்கள்மா
மாமா மாமி உறவினிலே
கொண்டாட்டம் குதூகலங்கள்

முகமலர்ந்த சிரிப்பினிலே
கவலைகள் மறையணும்
பெற்றோரின் ஏக்கங்கள் குறையணும்
வளர்ச்சியின் உயர்ச்சியிலே
கைதட்டி பாராட்டி
நானிலமே மகிழ்ந்திடணும்
நன்றி வணக்கம்