வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (94) (16/03/23
ஆகா வியக்கும் விழிகள்

வாண்மைத் திறன் கொண்ட ஆசிரியராய்
வினைத் திறன் கொண்ட அதிபராய்
அரும் பணியாற்றி ஓய்வு பெற்ற
எங்களூர் மிராண்டா மாஸ்டர்

கலை கலாச்சார பண்பாட்டு வித்தகராய்
மூத்த கலைஞர்களில் முதன்மையானவராய்
பாவைக் கூத்தின் நுட்பங்களறிந்தவராய்
வேர்களின் பெருமையை பின்னோரும் அறிந்திட

இசை சிற்பம் ஓவியம் ஒப்பனை
வரலாறென அழியாத சுவடிகளை
பதித்து வைத்து நிமிர்ந்த சுவடாய் வாழும்
நுண்ணறிவு கொண்ட சிந்தனையாளர்

நாடகங்களும் கூத்துக்களும்
கவிதைகளும் கட்டுரைகளும்
இவர் எழுதிய புத்தகங்களும் கிடைத்த
கலா பூசண விருதுக்கு நற் சான்றுகளாம்

பேசாலை மண்ணின் மைந்தராய்
எமக்கெல்லாம் மூத்தோராய்
வாழ்பவரை வாழ்த்த எனக்குக்
கிடைத்த வாய்ப்பிது
ஆகா என வியந்து பார்க்கும் விழிகளோடு
நன்றி கூறி வாழ்த்துகின்றேன்.
நன்றி வணக்கம்.