வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

08/03/23
கவி இல(93)
நிமிர்ந்த சுவடுகளாய் வாழும் சுவடுகள்

தமக்கென வாழா
எமக்கென வாழும்
ஒளி தரும் தியாகச் சுடராய்
எம்மை மகிழ்வித்து மகிழ்பவர்

வளமான வாழ்விற்காய்
அல்லும் பகலும் ஓடி்
திரவியம் தேடி
அசையம் அசையா சொத்துக்களும்

பயன்தரும் மரங்களும் பயிர்களும்
தோட்டத்திலே நட்டு வைத்து
தண்ணீர் பாய்ச்சி வளர்த்தெடுத்து
காயைக் கனியாகப் பறித்தெடுத்து
சுவைத்த தருணங்கள்

பிள்ளைகளுக்கு பாசமிகு தந்தையாய்
தளர்ந்து நிற்கும் வேளையிலே
தாங்குகின்ற சுமை தாங்கியாய்
அணைத்துக் காக்கும் என்னருமைத் துணைவர்யக

நெஞ்சமுருகி நெகிழ
நன்றியோடு நினைக்கின்றேன்
எனனிதயச் சுவரினிலே என்றும்
அழியாத சுவடாக என்னோடு வாழ்பவர்
என்னருமைக் கணவர்
நன்றி வணக்கம்