வியாழன் கவிதை

:நேவிஸ் பிலிப்

கவி இல( 91) 23/02 /23
பண்ணிசை

வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை
இன்சுவையாய் இனிக்குது
பாமுகத்தில் இசைக்குது
வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை

வண்ணத் தமிழால் சொல் தொடுத்து
பாடுகின்ற பண்ணிசை
கடவுள் மனதையும் கரைக்குது
கேட்போர் மனமும் உருகுது

இளையவரும் பெரியோரும்
பாடுகின்ற பண்ணிசை
எட்டுத் திக்கும் பரவுது கை
தட்டித் தட்டி ரசிக்குது

பாமுகத்தின் முற்றம் தானே
ஆலயமாய் மிளிருது
இறையின்ஆசீ அருள் மழையாய்
அனைவர் மீதும் பொழியுது

தமிழ் வளர்க்கும் பாமுகம்
எம்மை நெம்பி எழுப்பும் நேர் முகம்
மங்கா ஒளியில் வாழவே
பொங்கும் மகிழ்வில் வாழ்த்துறோம்.
நன்றி வணக்கம்.