வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

வியாழன் கவி இல(90) 16/02/23
புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம் எம்
மனங்களில் ஒளிரும் பொன் தேசம்
அகழும் மனிதரையும் தாங்கிடும் நேசம்
வேரை விழுதுகளை அணைத்திடும் பாசம்
புரிகிறதா மனிதா உனக்குப் புரிகிறதா.?

பண்பட்ட நிலத்தினிலே
பயிரிட்டு வளர்த்தெடுத்து
பக்குவமாய் தொகுத்தெடுக்கும்
பண்பாடு தெரிகிறதா மனிதா
உனக்குப் புரிகிறதா?

புழுதி வாரி எழும் மண் வாசம்
ஒன்று பட்டு வாழ்வதிலும்
ஒற்றுமையை வளர்ப்பதிலும்
இணைந்து வாழும் பொருள் தெரிகிறதா
மனிதா உனக்குப் புரிகிறதா?

தாயை மிதிப்பது போல்
இயற்கையை சேர்த்தழித்து
என்ன இன்பம் கண்டாய் மனிதா
வாழ்வாதாரமழித்து பொன் பொருளை
சேர்த்து வைத்து
கண்ட பலன் என்ன மனிதா?

மனங்களைப் பண்படுத்தி
களைகளை வேரறுத்து
புதைத்ததை உரமாக்குவோம் நாம்
விதைத்ததை மரமாக்குவோம்

கற்றுக் கொண்டோம்
நாம் கற்றுக் கொண்டோம்
புழுதி வாரி எழும் மண் வாச
நேசமதை கற்றுக் கொண்டோம்
நாம் கற்றுக் கொண்டோம்.
நன்றி வணக்கம்