வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்ஸ் இல 77

கவி இல 77
“இனிக்கப் பேசினால்..”
– Nevis Philips

உணர்வுகள் உள்ளத்தில்
ஊறிப் பெருக,
எண்ணங்கள் மனதிலே
எழுந்து விரிய
நினைவுகள் நெஞ்சிலே படர்ந்து நிறைய
சிந்தனை சிந்தையில்
செழித்து நிரம்ப

உள்ளத்தின் உணரச்சிகள்
சொற்களாய் மாறி ஒலியாக
அன்பும் பண்பும் நிறைந்திருக்கு
அறிவோடு பாசம் இணைந்திருக்கு

இன்பம் தரும் சொல் ஒலிகள்
கேட்போர் மனதில்மகிழ்வூட்டுது
சொல்லின் இனிமையும் பொருளின் செறிவும்
மீண்டும் மீண்டும் கேட்கத்
தோன்றுது

நன்றி