வியாழன் கவிதை இல(60) 02/06/22
தலைப்பு
மாய உலகு
வாழ்க்கை ஓட்டத்திலே
தென்றல் உலவும் தோட்டம்
தேன் சிந்தும் மலர்கள் சுற்றி
சுவைத்திருக்கும் வண்டினங்கள்
இன்று பாடிய வண்டினங்கள் இல்லை
தேன் சிந்தும் மலரும் வாடியே போச்சு
சோகங்கள் சூழ்ந்திருக்க
கானங்கள் போனதெங்கே
மலர்வதும் வாழ்வதும் இயற்கை என்றால்
மடிவதும் ஒடிவதும் ஓரிடமோ
என்ன என்ன காட்சிகள்
விந்தை இந்த உலகினிலே
இன்பம் உண்டு துன்பம் உண்டு
வாழ்க்கையெனும் ஒடத்திலே
என்ன என்ன காட்சிகள் காண்கின்றோம் கண்முன்னே
துன்பம் வேண்டாம் இறைவா
இன்பம் மட்டும் வேண்டுகின்றேன் .