வியாழன் கவிதை

நிலைக்சனா

சிந்திக்கலாமே..!

கல்வி என்பது பாடமல்ல
நடைமுறை வாழ்வை
இலகுவாக்க பாடத்தில்
இருந்து பெறும் அனுபவம்

இருந்து படிக்க நேரம்
இல்லாமல் ஓடி ஓடி
வகுப்பிற்கு செல்வது
அவசியமோ சிந்திக்கலாமே

எல்லோரும் கற்கும்
முறையை பின்பற்ற
வேண்டிய அவசியமுள்ளதோ
புதிய முறையை கையாலலாம்தானே

சுய கற்றலால்
மட்டுமே மூச்சு
காற்றாக உள்ள
இலக்குகளை அடையலாம்

– தி. நிலைக்சனா ஒட்டுசுட்டான் – இலங்கை.