நிமிர்ந்தே நின்றுவிடு
நல்ல காலமும் நாளை பிறக்கட்டும்
நலிந்தவர் இன்றியே வருசம் மலரட்டும்
வலிமை கொண்ட வல்லமையும் தோன்றட்டும்
தெளிவு கொண்டே சிந்தனையும் வளரட்டும்
அறத்தோடு அன்பும் அகிலத்தில் மேம்பட்டும்
ஆண்மீகப் பற்றும் இறையருளும் கூடட்டும்
இல்லங்கள் தோறும் இன்பங்கள் பரவட்டும்
இனிய உறவுகளும் இம்மானிலத்தில் துலங்கட்டும்
நாளைய உலகம் உந்தன் கைகளிலே
நல்லவராக நடப்பதும் நன்மையே பாராய்
வேளையும் இதுதான் விளங்கிட நகர்வாய்
வேடிக்கை இல்லை நீயும் உண்மையை உணர்வாய்
சாதிக்க வேண்டும் கல்வியை கற்றுமே
சஞ்சலம் நீங்கிடவே குரோதியே வருவாய்
நிமிர்ந்தே நின்றிடவே விளங்கிடுவாய் என்றும்
சர்வேஸ்வரி சிவருபன்