சந்தம் சிந்தும் கவிதை

நிட்சயமார்த்தம் —ஜெயபாலன்

“சந்தம் சிந்தும் சந்திப்பு” எண் 210
“நிட்சயதார்த்தம்”. எங்களது தவ பேறு ஜெயனி கண்ணு
இறை பேறாய் இல்லறத்தில் பெற்ற பொண்ணு
மங்கள நாள் நாம் கண்டு பதினா றாண்டு
மக வில்லா மன குறையை தீர்த்தாள் வந்து
பொங்கிய நல் அழகு கல்வி பொலிய பெற்று
புரிகின்றாள் தொழில் வயது இருபத்
திரண்டு
தங்கிய தோர் மன விருப்பை ஒரு நாள் வந்து
தாய்க்கு தான் கூறி வைத்தாள் தொடர என்று.
**
அவள் வாழ்வு அவள் விருப்பம் புலம் பேர் நாடு
ஆனாலும் நான் அறிந்தேன் விபரம்
தேடி
உயர் தொழிலும் பண்பு திறன் வம்ச
மேன்மை
உள்ளவன்தான் எம் சமயம் எல்லாம்
நன்மை
அயல் நாடு பூர்வீகம் அதனால் என்ன
அத்தனையும் பொருந்தியதால் மனதுள் தண்மை.
**
வந்ததுவும் சென்றதுமாமாய் மண கலப்பு
வாய்த்த வரன் என்பதில் நம் மன களிப்பு
இந்த வாரம் ஞாயிறு நிட்சய தார்த்தம்
எம் வீட்டில் ஏற்பாடு ஆரவாரம்.”
ப.வை.ஜெயபாலன்-