சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

நீர்க்குமிழி.

கீழ்வானம் அழகொளிர்ந்து
சிரிக்க கண்டேன்….
கோரை பூநுனியில் தும்பி வந்து
அமரக்கண்டேன்….
மீன்கொத்தி கீழ்நோக்கி
பறக்கக்கண்டேன்….
மின்மினிகள் குருவி கூட்டுள்
ஒளிரக் கண்டேன்….
கொடுங்கோலாய் போரொன்றும்
நிமிரக்கண்டேன்…..
கனமழையில் ஆடொன்று நனையுதென்று
கண்ணீர் விட்டழுத
நரியை கண்டேன்…..
பாதை மாறி கரைமீண்ட கலிங்க நாட்டான்
கடைவிரித்து படை நகர்த்தும்
இலங்கை கண்டேன்….
சோவியத்து ரசியாவில் நோட்டோ செய்யும்
நெறியற்ற பொறிப்பந்தல்
அதுவும் கண்டேன்….
நேற்றுப்போல் நாளைக்கும்
இருக்கும் என்றால்
நீயும் ஒரு பைத்தியம்தான்
என்றேசொல்வேன்….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாய் போகும் கதை
நீர்க்குமிழிபோல….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாகி போகும் கதை
நீர்க்குமிழிபோல…..

-நாதன் கந்தையா-