சந்தம் சிந்தும் கவிதை

நாதன் கந்தையா

#கண்கொள்ளா_காட்சி

செய்தவினை பின்னையொரு
திறனோ டாங்கு
திருமுடியும் மணிமகுடம்
சிதற ஓடி
நெல்லியது மூட்டையவிழ்
நிலமாய் மாறி
பல்லிழிக்க கண்டோமே
பௌத்தன் மைந்தா
தெங்குமர மேலிருந்த காட்சிபோல
திரை கடலின் ஓரத்தே
காலி வீதி
கண்டதென்ன கருமவினை
கொண்ட ஊழோ
காதறுந்த ஊசியதும்
தீதோ நன்றோ.

நாதன் கந்தையா.