அன்பு நிலைத்திட..!
-நவமலர் பாலேஷ்
பிறப்பின் அருமையை வர்ணிப்பதால்,
நானும் இன்று கவிஞனானேனோ..!
உன் பட சுருள்
கொண்டு நட்பின் நினைவுகளை
கொட்டும்,
உயிரோட்ட மறுவடிவம் என் சகோதரன்..!
எனைக் கவனிக்க
ஒரு சகோதரன்
இல்லை என ஏங்கிட்ட வாழ்வில்,
இறைவன் தந்த
அருமை சகோதரன் நீ..!
எப்போ எது தேவையோ
அப்போ என் பொய் அழுகையில் உந்தனை
என் வசமாக்கி,
எனக்காக நேரம், தேவை யாவும் நிறைவாக்கிடும்,
அன்பு கொண்ட சகோதரனே..!!
நான் கலங்கிடாதிருக்க,
ஒவ்வொரு அசைவிலும்
தன் தூக்கம் தொலைத்த
என் சகோதரா, உன் மலர்வு நாள் வாழ்த்துக்கள்..!
எதுவரினும் எவ்வேளையும் உன்னை விட்டுக் கொடுக்கேன்..
கடவுள் வந்து
கண் முன் நின்று ஒரு வரம் கேட்கின், வாழும் வரை உன்னோடு மாறா அன்பு நிலைத்திட வேண்டிடுவேன்..
நூறாண்டு காலம்
நோய் நொடி இலா வாழ்வு நிலைத்திட, குடும்பமாய் வாழ்த்துக்கள் சொரிகின்றோம்..!!
நன்றி