நினைவு தொலைந்த
கனவோடு நாமிங்கே!
**************************
நெஞ்சம் இருக்கும்
அங்கே அந்த
சந்தம் கூட
நன்றே இருக்கும்.
பசி இருந்தும்
உணவு உண்டு
பசி ஆறிடும்
சூழலும் இருக்கும்.
பட்ட துயரும்
மனதில் மறந்து
மண் விழுந்து
புது நாற்றாகும்.
விதை வழி நாற்றும்
குணமது சொல்லும்.
வாழ்விலும் நன்று
நின்று வெல்லும்.
பார்த்திட எல்லாம்
இருந்திடும் போல.
இருந்திடும் எல்லாம்
பயனற்றுப் போகும்.
பாலை தந்து பசியாற்றும்
கன்றை இழந்த அந்த
புல்லை தின்னும் பசு.
கண்டது என்ன சொல்லும்.
இங்கே தேற்றிய போதும்
தேறிடாத மனதோடு
வாழ்ந்து போகிறோம்.
மீதமுள்ள நாட்களையும்.
உடலும் உண்டு நாம்
உயிரோடு நின்றும்
கை இழந்து வாய் பேசும்
முண்டம் கொண்டோம்.
கண்டம் விட்டு ஏவ
கண்டு பிடித்து கொடுத்த
தமிழனால் கூட முடியாது.
எமக்கு தீர்வு தந்திட.
நேற்று நடந்தது
கலைந்து போனால்
பிறந்த போது இருந்த
நம் தேசம் மீளும்.
தலை நிமிர்ந்து
நாம் நடந்த பாதை
தாயகம் என்றாகும்.
நின்றும் நாம் வாழ்வோம்.
இன்று என்னவோ
கனவோடு கடக்கிறது.
வெறுமை மட்டும்
நெஞ்சம் நிறைந்து.
…….. அன்புடன் நதுநசி.