சந்தம் சிந்தும் கவிதை

நக்தி சக்திதாசாசன்

நினைவினிலே ஒரு சாரல்
எண்ணங்களில் ஒரு கீறல்
ஞாபகங்களில் ஒரு தூறல்
நெஞ்சினிலே ஒரு தேறல்

நேற்றைகள் தந்த நினைவுகள்
இன்றையில் நீந்தும் கனவாக
நாளையில் சுரந்திடும் நிஜமாக
நனைந்திடும் ஞாபக மழையாக

பிறந்திட்ட மண்ணின் வாலிபம்
மறந்திட்ட வாசத்தின் சுகந்தம்
சுரந்திட்ட வாழ்க்கை அனுபவம்
நிறைந்திட்ட புலத்தின் கோலங்கள்

வாழ்க்கைப் படகு மிதந்திடும்
சேர்க்கை உறவுகள் கலந்திடும்
மார்க்கம் தேடியே ஓடிடும்
தீர்க்கம் காட்டியே வரைந்திடும்

புரிந்திடின் வாழ்க்கை இரகசியம்
வருந்திடின் நிகழ்வுகள் அதிசயம்
பறந்திடும் காலத்தின் சூட்சுமம்
திறந்திடும் மனதின் கதவுகள்