வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

குழந்தைகள்தினம்

பற்றுக் கொண்ட குழந்தைகளே!
பாரில் மகிழ்வு கொண்டீரே!
கற்றுக் கொண்டு வாழ்வதனால்
கல்வி உயர்வு பெற்றிடுவீர்
உற்றுக் கேட்கும் அறிவாலே
உலகில் உயர்வு கண்டிடுவீர்
பெற்றுக் கொண்ட கல்வியினால்
பேறுகள் பலவும் நாட்டிடுவீர்

அல்லும் பகலும் கற்றுணர்ந்து
அன்பை என்றும் விதைத்திடுவீர்
சொல்லும் செயலும் கூட்டியிங்கு
சோம்பல் இன்றிப் படித்திடுவீர்
மெல்லப் பேசிச் சிரித்திட்டே
மேன்மை ஓங்க வழி செய்வீர்
வல்ல எங்கள் குழந்தைகளே!
வானம் எட்ட முயன்றிடுவீர்!

எண்ணும் எழுத்தும் கற்றிட்டே
ஏற்றம் காணும் புகழ்பெறுவீர்
கண்ணும் கருத்தும் கல்விமேலே
காட்டும் ஊக்கம் புவிமேலே
பண்ணும் இசையும் படித்திட்டே
பாரில் மேன்மை பெற்றிடுவீர்
மண்ணில் மகத்தாய் வாழ்ந்திடுக!
நகுலா சிவநாதன் 1699