ஒளியின்றி ஒளிர்வெங்கு
கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும்
பதியதன் பெருமை யாவும்
பகல்போல நிலவாகும்
உதிரத்தின் உணர்வெல்லாம்
ஊற்றாக மிளிர்ந்திடும்
வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே
ஒளிர்வுபெறும்
நதிபோல ஒளிபரப்பு நாநிலமும் பரந்திட
கதியாக வெளிச்சமும் கண்களை மயக்கிடும்
ஒளியின்றி ஒளிர்வெங்கு நிலைக்கும்
மதியாலே மானிடமும் மங்காமல் ஒளிரும்
ஒளியின்றி ஒளிராது நம்வாழ்வு;
வழியின்றி வாழ்க்கையும் நகராது
பழியின்றி ;நம்பயணம் பாடுகளாய் நகர
வளியொன்று வேண்டுமே வளமான ஒளியாலே!
நகுலா சிவநாதன்1738