நல்லூர் கந்தா!
பற்றுக் கொண்ட கந்தனவன்
பாரின் எமையே காத்தவனே!
கற்றுக் கொண்ட காலத்திலே
கனிவாய் எமக்கு அருளியவா
பெற்றுக் கொண்டோம் உன்னருளை
பேறு பெறவே துணையானாய்
முற்றும் உனையே வணங்குகின்றோம்
முருகா உந்தன் கொடிநாளில்
காத்தான் எங்கள் கந்தவேளே!
கருணை தந்த பெருவேளே
பூத்த மனதில் பதிந்திட்டாய்
புனிதம் பேணும் நல்லூரான்
சாத்தும் மலரின் நறுமணத்தே
சாந்தம் வீசும் உன்காற்றே
காத்த எங்கள் கருணைக்கடல்
காலம் யாவும் அருளுகந்தா
வேலனே உன்னை வேண்டிடவே
வெம்மை குறைத்தே காப்பாற்று
சாலவுமே வாழ்வில் சாதிக்க
சகல வழிகளில் கைகொடுப்பாய்
பாலனே பசுமை தளிர்த்துஎழ
பாரில் வறுமை ஒளித்திடுவாய்
ஞாலவும் உனையே வேண்டிடுவேன்
நன்மை செய்து நலங்காப்பாய்
நகுலா சிவநாதன்1731