வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

கிராமத்து வாசம்

மங்கிய காலை
மயக்கும் வேளை
தளிர்க்கும் பயிர்கள்
செழிப்புக் கண்டு
களிக்கும் மனத்தின்
அழகே தனிரகம்

தென்னோலை சலசலக்க
தெம்மாங்கு இசைபாட
வண்ணச் சூரியன்
வகையாய் ஒளிதர
எண்ணமெல்லாம்
எங்கோ பறக்கிறதே!!

தென்றலின் அணைப்பும்
தேசத்தின் மகிழ்வும்
இன்பத்தின் எழிலாய்
இன்னிசை பாட
இதயமும் குளிர்மை
பெற்றிடுமே!!

காற்றில் ஆடும்
பயிரின் அசைவும்
சேற்று. மண்ணின்
குளு குளு வாசமும்
கிராமத்தின் அழகும்
கிண்கிணி நாதமாகுதே!!

பச்சைப் பயிரும்
பார்ப்பவர் கண்ணும்
பட்டாம் பூச்சியின் பறப்பும் கொள்ளை
கொள்ளும்
கிராமத்து வாசமே!

விடியலின் அழகும்
சிந்தையின் ஊற்றும்
கடுகதி வேளையிலும்
கனவின் ஊற்றுக்களாய்
நினைவுப் பாதையில்
நடமாடும் தென்றல்
வரவுகளே!!

நகுலா சிவநாதன்