சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

மகளே!

கண்ணே! வருவாய் மகளே!
கருணைப் பேறே கலைமகளே!
பெண்ணே! பெருமை பெறவே
பேரும் புகழும் கிடைத்திடுக!
மண்ணே! மணியே மரகதமே!
மாலைகள் என்றும் சூடிடுக!
விண்ணே! போற்றும் கண்மணியே!
விந்தை உலகின் புதல்விநீயே!

நகுலா சிவநாதன்