உலகாளும் நட்பே.!
உள்ளம் இணைந்திருக்கும்
உறுதி யங்கே பூத்திருக்கும்
கள்ளம் இன்றி கலந்திருக்கும்
கடவுள் போலே சேர்ந்திருக்கும்
வெள்ள மாக விரைந்திடும்
வேதம் சொல்லி மகிழ்ந்திடும்
மெல்ல வளரும் நல்நட்பே
மேனி சிலிர்க்க உயர்ந்து விடும்
உலகாளும் நட்பே! உயர்ந்தது
விலையில்லா மகிழ்வு கொண்டது
அகத்தில் பூரிக்கும் அன்பே நட்பாகும்
இகத்தில் இதுவும் ஈடடிணையற்றது
நட்பே உப்பாய் உயர்ந்தது
நன்மை பலவும் சேர்ந்தது
வாழ்க்கை வனப்பே நட்பால்
ஆனால்
வாரியிறைக்கும் அன்பே
அகிலம் காணும்!
நகுலா சிவநாதன் 1684