வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

அன்றிட்ட தீ—–நிழலாடும்

அன்றிட்ட தீ அனலாக அழித்து
மன்றத்தின் நுாலகம் மடிந்து அழிந்ததே!
குன்றாகத் தமிழரின் அறிவாலயம்
நன்றாக இருந்தது நாட்டிற்கு உதவியது

பொல்லாத துட்டர்கள் நில்லாமல் அழித்தனர்
இல்லாது நிற்பது தமிழர்க்கு கவலையே!
பல்லாயிரம் நுால்கள் கருகின!
பறந்து காற்றில் மிதந்தன!

அன்றிட்ட தீ அடிமனதில் அனலானது
அறிவான நுால்கள் ஆற்றலின் தேடல்கள்
தீயின் பொசுங்கின நொருங்கின

மீண்டும் மிடுக்கோடு சாம்பலின் மேட்டிலே
சரித்திரமாய் நிமிர்ந்தது!
அரக்கரின் அநியாயம் அழிக்குமே தீயும் ஒருநாள்
தமிழரின் ஊக்கம் தரணியில் எழுந்தே
மீண்டும் எழுந்தது மிடுக்காய் உயர்ந்தே
முன்னிலை கலைமகளும் முனைப்பாக காக்கட்டும்

அன்றைய நினைவும் அறிவின் களஞ்சியமும்
நின்றிடும் வேளையில் நிழலாடும் நினைவுகளாய்!
எரித்தாலும் எழுவோம்
எல்லையில்லா அறிவை என்றும் பெறுவோம்.

நகுலா சிவநாதன்1675