காலத்தின் மாற்றத்தில்—–
மேதினியில் அவலம் நிறைந்த சோகம்
மேடு பள்ள வாழ்விங்கு—-
கூடு பிரிந்த குவலயநாள்
நாடு இழந்த அன்றில் பறவைகள்
இன அழிப்பின் உச்சம் மே 18
இலங்குகின்ற வாழ்வின் மிச்சம்
தேடி யழித்து தொல்லை தந்தே
தேசம் விடிவு பெறா நிலையில் இன்று
முள்ளி வாய்க்கால் அவலம்
அள்ளி எடுத்த உயிர்கள்
அத்தனையும் காவு கொண்ட நாள்
சொல்லி மாள முடியவில்லையே!
சோகம் தீர்ப்பார் யாருண்டு
நகுலா சிவநாதன் 1674