சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

தீயில் எரியும் தீவு

ஆட்டமும் அதிகாரமும் ஆடுது
கூட்டமும் மக்களும் கூடுதே
இனவெறி அதிகாரம் நடமாடுது
இடர்கள் நிறைந்து பெருகுது

துயர்கள் நிறைந்த அவலம்
துணிவு அற்ற இனவாதம்
தீயில் எரியும் தீவு இன்று
தீந்தமிழ் பாடுது பாக்களால்

தொல்லை தந்த வெறியர்
தோல்வி பெற்றே நிற்கின்றனர்
அல்லல் தந்த அநியாயம்
ஆறாய்ப் பெருகுது துயரின் விழிம்பில்

நகுலா சிவநாதன்