தொழிலாளி
உழைப்பின் உறுதியை
உன்னதமாய் மேற்கொண்டு
பிழைப்பின் மூலதனத்தை
பிறருக்கும் வழங்கும்
கொடையாளி தொழிலாளி
மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்த
மண்ணின் தொழிலாளி
மாபெரும் உழைப்பாளி
உழைப்பின் உன்னதம்
உலகம் உணரும் மூலதனம்
களைப்பை பார்க்காத
காலம் முழுதும் உழைக்கும்
நல்உழைப்பாளி தொழிலாளி
நகுலா சிவநாதன்