வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

நல்வரவாகுக!

மயக்கும் வான அழகும்
மகிழும் காலை நற்பொழுதும்
தயக்கம் இன்றி உழைப்பும்
தரணி போற்றும் பெரும்வரமாம்!
வியக்கும் வண்ண வனப்பு
விந்தை நிறைந்த அழகன்றோ?
நயக்கும் பொழிலின் நிறைவு
நன்மை யளிக்கும் எழிலாகும்

மன்றம் தவழும் காற்றும்
மாட்சிமை மிக்க பேரழகும்
குன்றுபோல் உயரும் எண்ணமும்
குலவி வருமே நல்லாட்சி
இன்பம் பொங்கும் சித்திரை
இனிதாய் பிறக்கும் புதுவருடம்
அன்பே பொழிந்து வருக!வருக
ஆற்றல் மிதந்து நல்வரவாகுக!

நகுலா சிவநாதன் 1665