வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

விடியலின் உன்னதம்

விடியலின் அழகும் விந்தையின் ஒளியும்
கடிதென வந்து காலையைக் காட்டுது
படியதன் அருகே பனித்துளி விழுந்து
பன்நிற ஒளிதனை காட்டியே மின்னுது

உன்னத விடியல் உலகிற்கு அழகே
சென்னிற வானம் சேதிகள் சொல்லி
பன்னிறப் பூக்களை பாரிலே விரிக்குதே
கண்ணது காட்டி காலையின் காசினி உரைக்குதே

இயற்கையின் விந்தை இதயத்தை தொட
இங்கித பொழுது சங்கீதம் பாட
புதுமையின் புளகாங்கிதம் பூத்திடும் பாக்களாய்
வெறுமைகள் அகற்றி பார்க்குது மனசும்

காலத்தின் விடியல் ஞாலத்தில் ஒளிபெற
வாழ்க்கையின் விடியல் வரலாறாய் பதிய
புதியன விடிவும் புத்தொளி மலர்வும்
கடிதென வந்து காலத்தை உரைத்தே நிற்கும்

நகுலா சிவநாதன்1654