வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

கட்டார் பந்தாட்டம்

காலை கதிரவன் கண்ணே விழித்திடவே
சோலைப் பைங்கிளி சோகம் பாடிடவே
மாலை முழுதுமே மகிழ்வு தோன்றிடவே
பாலை வெளியிலே பகலே படர்ந்ததே!

கட்டார் நாட்டில் உதைபந்தும்
கனமாய் சுற்றி உருள்கிறதே!
பட்டி தொட்டி எங்கணுமே
பந்தின் வெற்றி பேச்சுக்களே!
வெற்றி தோல்வி விளையாட்டில்
வெறுமை வாழ்வு நிலைநாட்டும்
பற்றி ஒன்றி ஒற்றுமையும்
வெற்றியோடு விளைகிறதே!!

நாடுகள் பலவும் போட்டியாக
நன்றாய் உழைக்கும் நல்லாட்டம்
மதியும் இங்கு நுட்பமாக
மதிக்கும் உலக ஆட்டமுமே!!

நகுலா சிவநாதன்1701