வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

எல்லாம் சிலகாலம்

காலங்கள் எல்லாம் சிலநாட்கள்
கனிந்திடும் திருநாளும் சிலநாட்கள்
பாலங்கள் அமைத்து வாழ்ந்தாலும்
பண்போடு வாழ்தலே பேறாகும் பெருமை

எல்லாம் சிலகாலம் நடக்கும்
ஏற்றம் ஒருநாள் வந்தேயாகும்
பல்லோர்கள் போற்ற வாழ்வதுண்டு
நல்லோராய் வாழ்வதும் சிலநாட்கள்தான்

பெருக்கும் செல்வமும் பெருமையுடன் உழைப்பும்
வருத்தி உடலை வாழ்ந்தாலும்
எல்லாம் சிலகாலம் தான்
உணர்வான வாழ்வினில் உழைப்பே மூலதனம்
உழைப்பும் சிலகாலம்தான்

எண்ணிடும் நாட்கள் எழுத்தோடு உயர்ந்தாலும்
மண்ணின் உயிர்களை நினைப்பதும் சிலகாலம்
பண்ணிய பாவங்கள் படிப்பினை தந்தாலும்
நுண்ணிய அறிவோடு வாழ்தலே சிறப்பு
எல்லாம் சிலகாலம்தான்

நகுலா சிவநாதன்1726