வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய்

தலைசாய்க்கும் ஒவ்வொரு மணித்துளியும்
நிலமதன் காத்தலையே
நின்று உரைத்து
சொல்லுதே!!

மனிதம் நிமிர
புனிதம் பேண
வாழ்ந்தவர்காய்
வரலாறு உரைக்கும்
காலச்சுவடு!!

தாயக விடுதலையை
நேசமாய்க் கொண்ட
மாவீர மணிகளே!!
தலைசாய்ப்போம்
இன்னுயிரை ஈந்தமைக்காய்

பொன்னான தாய்நாட்டை
பொழுதிலும் காத்த மறவரே
உம்வீரம் கண்டோம்
உணர்விலும் எழுந்தது தாய்நாடே!!

மனிதம் நிமிர
வாழ்ந்தவர்க்காய்
தலைசாய்ப்போம்
வீரமறவர் தியாகத்தை
போற்றுவோம்
நகுலா சிவநாதன் 1700