வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

பொலிவாய் புதுமை தந்த நூலகமே
பொழுதிலும் பூத்த அறிவுப் பெட்டகம்
வலிந்து தீயோர் அழித்த கூடமே
வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்

ஆசியா கண்ட அரும்பெரும்; நூலகம்
தேசிய பரப்பினை நிறைத்திட்ட பெட்டகம்
பல்லாயிரம் தமிழரை உயர்த்திய ஏணி
பாருக்கே பெருமை தந்த தோணி

தாயக மக்களின் கனவுச் சுரங்கம்
தாராள அறிவினை ஊட்டிய மையம்
பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும்
நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே!

சாம்பலின் மேட்டில் சரித்திரம் படைத்தே
தாங்கி நிமிர்ந்து நிற்கிறது பெருமையுடன்
எம்மை வளர்த்த எழில் நூலகமே
உம்மின் பெருமையை உலகில் கண்டோமே

நீண்ட வாழ்வில் நிமிர்ந்து நின்று
தீண்டும் கல்வி விருட்சம் காண
மீண்டும் ஒரு பொசுக்கும் தீ வேண்டாம்
நீண்டு புதுப்பொலிவு கொண்டே எழுகவே

நகுலா சிவநாதன் 1723
(இதனை எடுக்கவும். முதல் பதிவு தவறாக வந்து விட்டது. மன்னிக்கவும்)