வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

முடியும் என்று முனைந்தால்…….

கற்று கொள்வாய் மனிதா
காலம் உன்னைக் கண்டுகொள்ளும்!
பெற்றுக் கொள்ளும் அறிவு
பெருமை சொல்லும் உலகினிலே
உற்றுக் கேட்டுப் படித்தால்
உலகே வென்று வாழ்ந்திடலாம்!
பற்றுக் கொண்டு வாழ்ந்தால்
பாரே பெருமை பேசிடுமே!
முடியும் மென்று முனைந்தால்
முயற்சி என்றும் பலனாகும்
விடியும் நாளும் வருமே
விளைவும் உயர்வு தந்திடுமே
மடியில் பிள்ளை தவழும்
மனத்தில் மகிழ்வு மலர்ந்திடுமே
குடியில் மாண்பு கொழிக்கும்
கூடி மகிழ்வு நிலைத்திடுமே

நகுலா சிவநாதன்