வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண்வாசம்
புகழைத் தந்த நல்வாசம்
அகத்தில் அன்பு பொழிந்திடவே
அமைதி கிடைத்த நன் நாளே!

ஆழ்கடலில் முத்தாக ஆனமட்டும் வித்தாக
ஆற்றல் தேடி வந்தோமே அல்லல் பல சுமந்தோமே!

காற்று அடிக்கும் வேளையிலே
கன்னி மனதில் ஆசையிலே;
ஆற்றின் ஓரம் அமைதி கண்டு
ஆனந்தத்தில் மிதந்தோமே!

பாட்டுப்பாடி மகிழ்ந்திருந்து
பாதையோரம் நிலாவெளிச்சம்
நாற்று நட்டு உழைத்த காலம்
நாளை வருமா? அந்த நாளும் ?

நகுலா சிவநாதன்1709