சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

செவ்வாய்
சந்தம் சிந்தும் கவி 179.

அப்பா.

அப்பா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
அப்பா என்றால் பாசம்
அப்பா என்றால் எனக்கு
றோல்மொடல்

நல்லவருக்கு நல்லவர்
கெட்டவனுக்கு கெட்டவர்
அப்பா
படிக்க முடியாத புத்தகம்
புத்தி சொல்வதில் ஆசான்
புத்திரருக்கு தலைகுனிவு
வராமல்
பாசத்தை
மனதில் பூட்டியே வேசம்
போட்டுவார்.

சோற்றில் கைவைக்க முன்
பிள்ளை சாப்பிட்டானா
விசாரிப்பார்

அம்மா பாசம் கண்ணாடி
போல தெரியும்
அப்பா பாசம் கதிரவனை
மறைத்திட்ட முகில் போல வெளியே தெரியாது
தெரிந்தவர் சொன்னால்
தெரிந்திடும் அவர்பாசம்.

உழைத்து சிவந்த கைகள்
உடலில் வேத்து வழியும்
நீரும்
அவர் துயரம்
புரியாத பருவம்
புரிந்த போது கண்ணீரே
பதிலாச்சே.

நிழற்படாமாச்சே
அப்பா நல்ல புத்தகம்
மீண்டு எடுக்க முடியாத
சகாப்தம்.

நன்றி அதிபருக்கும் பாவை அண்ணா .
அனைத்து கவி எழுத்தாளருக்கும் நன்றி.