நிலை மாறும் பசுமை ……..
உருமாறும் பார்…….
பச்சை பசுமையான நிலங்கள்
பாராமுகமாய் காய்ந்து
காட்டுத் தீயால் சாம்லாய்
களனி எங்கும் மாடிக்கட்டிடங்கள்
கனிதரு தருக்கள் அழிக்கப்பட்டு
பறவைகள் மிருகங்கள்
வாழ்வை இழந்து அழிகிறது.
வானம் பொய்து வரண்டு
நீரின்றி விவசாயம் செய்த
நிலமும் பாலைவனமாகிறது
உணவின்றி நீரின்றி பஞ்சமும்
தலைவிரித்தாடி
உயிரைக் குடிக்கிறது
சூரியன் சென்ற பின் நமஸ்காரம்
வேண்டாம்
கூட்டம் கூடி பேசி காலத்தை
போக்காது போரை நிறுத்தி சுற்று சூழலை
காக்க
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீட்டில் ஒருசிறு தோட்டம்
அமைத்து பசுமையை
காத்து
தன் நிறைவடைவோம்.
இனைந்தே முயல்வோம்.
அதிபருக்கும்
நகுலா சிவதஷ்சினி வாணி.