வியாழன் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

24.2.22 வியாழன் கவி 180.

வாசமுள்ள மலர்கள்:

அகிலத்தை அழகாக்கும்
மலர்கள்
அகத்தினையும் அழகாக்கும்
பார்க்கும் மலர்கள்

இனற்கையின் அதிசயம்
பல வண்ண மலர்கள்

இறைவனையும் அழங்கரிக்கும்
வாசமுள்ள வண்ண மலர்கள்

காதலுக்கும் மலர்கள்
மோதலின்
பின்
சாமாதானத்திற்கும்
மலர்கள்

பாக்குமிடமெங்கும்
மலர்கள்
பாதபூசையிலும் மலர்கள்
பற்பல வண்ண வண்ண
மலர்கள்

மணமகளையும்
அழங்கரிக்கும்
மலர்கள்
மணமேடையும் அழங்கரிக்கும்
மலர்கள்
தலை முடியையும்
அழகாக்கும் மலர்கள்
மலர்கள் இல்லாத
வனமும் இல்லை
வீடும் இல்லை

மலர்கள் போல மணம் பரப்பி
மகிழ்வாய் வாழ்வோம்.

அதிபருக்கும் வாணி க்கும்
நகுலா தர்ஸ்சினிக்கும் வாழ்த்துக்கள் நன்றி.