தண்ணீருக்கு ஏங்கி
தவ்விப்போர் கலங்கி
கண்ணீர் வடிப்பார்
கவலையில் நாவரண்டு
உண்ணீர் என்று உபசரிக்க உறவில்லா
எண்ணற்ற சிறார்கள்
எச்சில் இலை வழித்து
கண்ணீர் கலந்துண்ண
காண்கின்றோம் பாரில்
கண்ணான பிள்ளைகள்
காசாசை பெற்றோரால்
புண்ணாக பிஞ்சு உடல்
பொல்லாதார் வீடுகளில்
எண்ணரிய இன்னல்கள்
எடுபிடி வேலைகளில்
விண்ணே பொருமி
விடுகிறது ஓயாமல்
தண்ணீர் வெள்ளத்தை
கண்ணீராய் தண்ணீரை
கண்டிக்க உலகத்தை.