வியாழன் கவிதை

தி.நிந்துசா

தானே தோன்றி
தருவான் வரம்..!

ஒட்டில் பிறந்து.
மண்ணில் வளர்ந்து.
இலிங்கமாய் எழுந்து.

விதைத்த குரக்கன்
விதை நிலத்தில்
செப்பமிட்டது போல
ஒரு வடிவில் சிவன்.

காலத்தின் கணக்கில்
நிலை மாறது
நிற்கும் இந்த சிவன்.

தான்தோன்றி பட்டம்
தான் கொண்டே
அருள் தந்திடுவான்
ஒட்டுசுட்டான் மண்ணில்.

அடியவர் நாம் கூடி
அவன் அடி தொழுது
அன்பை பெறலாமே.

– தி.நிந்துசா ஒட்டுசுட்டான்