திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்..
சின்னச் சின்னச் சிட்டுக்களே
சித்திரமாய் வந்த சொத்துக்களே
கண்ணிலே ஆடும் கண்மணிகள்
காலத்தில் ஆளும் நாயகர்கள்
வென்னிலாப் போன்ற மின்மினிகள்
வெகுமதியான பொன்மணிகள்
பாலவயதிலே துறுதுறும்பு பார்ப்பவர் நெஞ்சிலே கிளுகிளுப்பு
சோலைவனத்துப் பூங்குயில்கள் சாதனை செய்யும் பேரொளிகள்
எத்தனையாற்றல்கள் எத்தனை திறமைகள்
எத்தர்களில்லாத நற்குணங்கள்
சுட்டித்தனங்கள் நிறைந்தவர்கள் சுதந்திர எண்ணம் பூண்டவர்கள்
வண்ணத் திலகங்கள் ஆனவர்கள்
வாழ்விலே மலர்ந்த பொக்கிசங்கள்
சோம்பல் இன்றியே நிற்பவர்கள்
சங்கீதமாக இசைப்பவர்கள்
பூஞ்சிட்டுக் கன்னங்கள் கொண்டவர்கள்
புதுமைகள் பொங்கிடப் பிறந்தவர்கள்
திறனில் மேன்மை கொண்டவர்கள் தீட்டும் குழந்தைகளே வாழி! வாழி! …..
சர்வேஸ்வரி சிவருபன்