வியாழன் கவிதை

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…

உழவால் பண்படும் நிலம் போல
உருவாக்கத் திறனால் மேம்படும் குழந்தைகளே
நிறைவில் நிறைமதி போன்றவர்கள்
நிலாவைப் போல ஜொளிப்பவர்கள்
அறிவால் அடித்தளம் பாலமிடும்
அன்பால் கோபுரக் கோலமிடும்
மேன்மை உறவில் பாசமிட்டு
மேதினி நிறைகின்ற பேரன்பில்
பேதமறியாப் பிரசவத்தில்
பிறப்பின் வலுவால் பேதலித்து
காலம் கனிந்த உற்சாகம்
கணதி குன்றிடும் மனத்திடமும்

முடியுமென்ற முழுமையினை
பாரே வியக்கும் பாமுகமாய்
திறமை வளர்க்கும் தேட்டமென
நிமிர்வை புடமாய் இட்டு வைக்கும்
நீண்ட சேவை வைப்பகமே

திறனின் மேன்மை தீட்டுகிறாய்
திகழ்வோம் விண்ணின் உடுக்களென
அறிவோம் அர்ப்பண அரும்பொழுதை
உயர்வோம் உலகில் உள்ளன்பில்
திறமை தீட்டிய தேட்டகத்தின்
தீபச் சுடராய் திகழொளியாய்!
நன்றி
மிக்க நன்றி