வியாழன் கவிதை

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…!

“திறனின் மேன்மை” தீட்டும்
குழந்தைகளே…!
வியாழன் கவி 1967..

மீட்டும் வீணையென
மிரளாத விழிகளென
உங்கள் திறன்கள்
உலகே வியக்கின்றன
மன்றம் வந்த குன்றுகள்
மகிமை குன்றா ஒளிர்வுகள்..
மகிழ்வு சிந்தும் மக்காள்
உங்கள் பிறப்பே சிறப்பாம்
பொன்மாலைப் பொழுதுகள்
கன்னல் மொழியால் ஆழும்
ஆளுமைப் பெட்டகங்களே
அன்பினால் உமை வாழ்த்தி..
திறனின் மேன்மை தீட்டு
தீராத தீந்தமிழ் மீட்டு
திக்குகள் எங்கும் முழங்கு
திகழட்டும் உம் புகழ் ஓங்கு..
தீட்டும் திறமைகள் கண்டு
தினமும் நம்மை நாம் மீட்டும்
வீணா ஒலியில் விளங்கும்
விடியல்களே உம் புகழ்..
வழி தந்த பாமுகம் ஏற்று
வழிப்படும் உளங்கள் நாற்று
உழிகொண்டு செதுக்கிய இறை
விழிகள் வியக்க நீ பறை…!
சிவதர்சனி இராகவன்
25/4/2024