வியாழன் கவிதை

திரேஸ் மரியதாஸ் UK

வியாழன் கவி

🌺காலாண்டுப் பாமுகமே நூற்றாண்டுப் பார்
முகமாகு🌺
ஏதிலியாய் எட்டுத்திக்கும்
ஓடியோடி அலைந்து
அன்றாடவுணவையே
அமைதியுடன் உண்ணாது
அனைவரும் பிறந்தநாட்டை
நினைத்தேங்கிய வேளையில்
நனைத்தாயே தமிழமுதமாய்
சூரியக்கதிர் வானொலியான
சண்றைசாய்

தமிழெனும் சூரியன் அகத்தில்
உதிக்க அக்கதிர்களில்
அன்னைத்தாய் நாட்டொலி
பட்டுத்தெறிக்க அதனால்
ஒளிபெற்று புதுத்தென்பாய்
ஒலித்தாயே காதுகளில்
கனிரசம் ததும்ப

ஐரோப்பாவின் வானொலியாய்
ஒரே ஒற்றைக் குரலாய்
ஓங்கியொலித்தாய்
இரவு இரண்டுமணிநேரம்
இற்றைக்குப்போல அன்று
வென்று நிமிர்ந்திட

இன்று கால்நூற்றாண்டில்
கால் பதித்துள்ள
இலண்டன் தமிழ் வானொலி
பல நூற்றாண்டைக்காண
அடுத்ததலைமுறைநோக்கி
இளையோரை இணைத்து
வீறுநடைபோடுகிறதே
வேகம் விவேகமாயே

பாமுக அதிபர் நடாமோகன்
தொகுப்பாளினி வாணிமோகனோடு
தோன்றித் தெரிந்து விரிகிறது
விருட்சமாய் வெளிச்சமாய்
விடிவெள்ளியாய் விடியத்தொட்டு
கொடியாயே படர்ந்து இரவுமுதல்
வாழ்க வாழிய வாழியவே
தமிழ் ஒளியாயே..!