🌺ஏற்றிவைத்த ஏணிகள்🌺
அரிவரிதொட்டு அகலமான அறிவுதரும்
பல்கலைக்கழகம்வரை அகல்விளக்குகளாய்
அடுத்தவரையும் வாழவைக்கும் பக்குவத்தைப்
படிப்போடு சேர்த்து கூட்டிவைத்த
விடிவெள்ளிகள் நீங்கள் வாழ்க
ஆசான்களே ஆசிரியர்களே உங்களின்
அறிவுக்கடலுக்குள் அன்பையும்
அரவணைப்பையும் அள்ளித்தந்து அதற்குள்
மூழ்கி முழுக வைத்து
மருத்துவராய்
பொறியியலாளராய் ஆசிரியாய்
சட்டத்தரணியாயென எம்மை
முத்துக்களாய்க் கெத்தாய் மின்னவைத்த
கற்ப்பூர தீபங்களே
நன்றிக்கடனாய் நானிந்தக் கவியைக்
காணிக்கையாக்குகிறேன் நன்றியாய்
ஞாலத்தில்க் காலமுள்ளவரை
ஐப்பசி பதினைந்தை குருக்களாகிய
உங்களுக்கு தட்சனை வைத்ததுபோல
வையகத்திலே அலங்கரிக்கவைத்த
பாமுகத்தையும் பணிந்து வாழ்த்தி
இலண்டன் தமிழ் வானொலியும்
உங்கள் சேவையால் உள்ளூர
நனைந்து தோய்ந்ததை நானும்
நான்கு முகங்களுமாய்
நாளும் நெகிழ்வாய் நினைக்கிறோமே
நன்றியாய் என்றும்
ஆக்கம்- திரேஷ் மரியதாஷ்
இலண்டன், சட்டன்