🌺மலர்களின் வனப்பில் மயங்கி🌺
பார்த்துப்பார்த்து வளர்த்த நீங்கள்
கூர்ந்து நோக்கமுதல்
நூர்ந்து போகிறீர்களே
வேர்த்துப் போகிறேனே வேதியல் நுட்பத்தை எண்ணி
உங்கள் சுந்தர முகிழ்ப்பின் சூன்யமென்னவோ
உங்கள் பேரழகோ என்னைப்
பித்தாக்குகிறது
பின் தோற்றம் என்னைக் குத்துகிறதே
மஞ்சல் சிவப்புக்
கறுப்புவெனக்
கலந்துவைத்த கலவை என்னைச்
சிதைக்கிறதே அன்பு சித்திரவதையாய்
வண்ணவண்ண வடிவங்கள்
என் எண்ணத்தின் அண்ணத்தைச்
செதுக்குகிறதே சித்திரம்
வரையாமலே கரைத்துப்
பிக்காசோ ஓவியமாய்
ஒன்றுமட்டும் உங்களில்ப்
பிடிக்கவில்லை
நாடியோடி வந்து எட்டிப்பிடித்துக்
கட்டியணைத்துக் கன்னத்தில்
களிப்பாய் முத்தமிட
அடிப்பதைப்போல துடிக்கிறீர்களே
ஒற்றை நாளில் ஒடிந்து
வெட்கப்பட்டு வாடியே
நொடியில் நாணி
மாறிவிடும் உன்முகத்தையும்
மடிந்து மூடிவிடுவாயெனக்
கண்டுகொண்டாலும் முடிந்தவரை
பெற்றுக் கொள்கிறேன்
வண்டைப்போல முள்ளுக்குள்ளும்
மகிழ்ச்சித் தேனைத்
நெகிழ்ந்து தித்திப்பாக்கித்
திகட்டாமலே பருகி
உருகி நானும்
ஆனந்தத்தேனை
அள்ளிக்குடித்தே