சந்தம் சிந்தும் கவிதை

“திரேஸ் மரியதாஸ்”-சட்டன்-லண்டன்

🌺எண்ணம்🌺
எண்ணமெனும் ஊற்றை
ஊற்றெடுக்கவைக்கும்
சிந்தையென்னும் தொழிற்சாலையைச்
சீராக இயக்கிச் சிக்கலில்லாமல்
செதுக்கிச் சிற்பமாக்குவோம்
செழிப்பாய் எழ

கடந்தகால எதிர்கால எண்ணங்களை
காத்திரமாய் காக்காது
போக்கி நல்வாழ்வு வாழ
பொக்கிஷமான வழி
தியானமே தியானமேயெனத்
தினமும் செய்வோம் சிறந்ந
மூச்சுப்பயிற்சியதை

போக்கவேண்டும் போலியானதான நினைவுகளை
இல்லையேல் உடலையும்
உணர்வுகளையைம்
காலியாக்கிவிடும் கடந்தகாலமது
கண்ணுக்குள்ளும்
நெஞ்சுக்குள்ளும் வந்து
கசப்பாக்கி கலைத்தேவிடும்
களிப்பான வாழ்வை

வாழ்வெனுங்கொடையை
சுவைத்து நறுமணம்பரப்பி
நற்சிந்தனைகளை
நாமுமெண்ணி நால்வகை
நிலங்களும் நுகரும்
நல் லெபனானின்
கேதுறு மரங்களாவோம்
———————————————-
பாமுக அதிபருக்கும் தொகுப்பாளினி வாணிமோகனுக்கும்
தொகுப்பாளர் ப.வை ஜெயபாலன் அவர்களுக்கும் அனைத்துக் கவிஞர்களுக்கும் அன்பான வணக்கமும் வாழ்த்துகளும் நன்றிகளும்
பாராட்டுகளும் என்கவியூடே எண்ணங்களாய்ப் பவனிவரட்டும்
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺