சந்தம் சிந்தும் கவிதை

திரு. தேவகஜன்…

21.03.2023
சந்தம் சிந்தும் வாரம்.
கவித் தலைப்பு !
” விடியல்”

என்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும்
விடியல் எப்போ என்கின்ற
வினாவோடு கடக்கின்றதே.
விடியல் எப்போ?

என்னை விடாமல் துரத்தும்
துன்பங்கள் விலகி
நிம்மதியென்ற பெறுமதிக்குள்
ஓய்வெடுத்துக்கொள்ளும்
எனக்கான கால விடியல் எப்போ?

என்னை கடந்த சம்பங்கள்
நினைவுவென்ற உணர்வுக்குள்
நிரம்பி எனக்கான நிஜத்தில்
தடுமாற்றங்களை தருகின்ற
வேதனைகளிலிருந்து நான்
விடியலாவது எப்போ?

என்னில் மலர்ந்தவளை
மணம்முடிக்க முடியாமல்
நினைத்து கிடந்து அழுகிறேன்
இது முடிந்துவிட்ட கதையல்ல முடிக்கப்பட்ட கதை என்னில்
உறைந்து கிடக்கும் அவள்
என் இதயத்தை உச்சமான
வலிக்குள் வலிந்து இழுக்கின்றாள்

நானோ நாளும் நலிந்து போகின்றேன்
உடைந்து போனது அவள் உறவு
விடிந்தபோதும் பார்க்கிறேன்
விடியல் எனக்கு இல்லை.

வெறுப்புக்களோடு
என் வாழ்வை நான்
தொடர்ந்து வாழப்போகின்றேன்
உன் நினைவுகளை மட்டும் சுமந்து
நான் அறிந்தேன்
என் அறியாமை
இனி என் காதல் ஊமை
உன்னை அறிந்து கொண்டபோது
என்னை நான் தெரிந்து கொண்டேன்

ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளும் நேரத்தில்
பிரிந்து செல்லும் இத்தருணம்
சரிந்து சாய்கிறதே என் நெஞ்சம்.

என்றுமே கரையாத
உன் நினைவு!
உனை என்றும் மறந்தும்
போகாதோ என் மனசு!
இன்று காசு உன் கண்ணை
மறைத்தது
அது எனக்குள் சோகத்தை
நிறைத்தது
கள்ளமில்லா என் காதலுக்கு
உள்ளமில்லாதவளாய்
நீ செய்த செயல்
என் உயிருள்ளவரை
என்றும் மறவேன்.

மெல்ல நீ விலகையில்
வெள்ளமாய் கண்ணீர்
இனி உன் நினைவுகள
என்னை கொல்லும்
ஓர் நாள் காலமும்
என் மனதை
தெளிவாக உனக்கு சொல்லும்.
அதுவரை எனக்கான விடியலை
நான் தேடிக்கொண்டேயிருப்பேன்.
நீயில்லாத வாழ்வு விடியல்
தராது என்பதை அறிந்தும்.

நன்றி.