சந்தம் சிந்தும் கவிதை

திருமலை கோணேஸ்

அழகு
இயற்கை அழகில்
இதயம் பதியும்
இதமாய் காலை
பொழுது மலரும்.

களிப்பொலி எழுப்பும
காலை குருவிகள்
ஒளிரும் சூரிய
கதிர்கள் ஒளிரும்.

வானத்தே மேக
வண்ணம் தெளிவாய்
நீலம் வெள்ளை
ஜாலம் பொலிவாய்

தோட்டம் சந்தை
தோழிற் சாலைக்கும்
றோட்டில் சிறுவர்
பள்ளி தலத்தும்

கூட்டம் கூட்டமாய்
ஓட்டம் போடும்
மாட்டு ,மோட்டார்
வண்டிகள் போகும்.

ஊரின் அழகை
உளத்தில் தேக்கும்
காலை காட்சி
கவலையை மூட்டும்.

-திருமலை கோணேஸ்-