சந்தம் சிந்தும் கவிதை

திருமதி மனோகரி ஜெகதீஸ்வரன்

மாட்டு கொட்டில்”

முட்டிமோதித் தாய்மடி தட்டித்
தொட் டுச் சுவைக்கும் பசுக்கன்று
கொட்டச் சிதறிய வைக் கோலுக்குள்
தத்தித் தேடும் சிட்டுக்குருவி
வெட்டிப் பரப்பிய புல்லுக்குள்ளே
வேகமெடுத்து நெளிந்து மறைந்தெழும் புழுக்கள்
சட்டெனப் பறந்து இடம்மாறும்
சாணத்தில் மொய்த்த கொசுகள் வண்டுகள்
கட்டவிழ்ந்த நினைவுச் சுவடிக்குள் தெரிய நானும்
தொட்டுச் சுவைத்தேன் பசும்பாலை
தொட்டுத் தட்டிய கையொன்று
காட்டியது கனவென்று
பட்டென்று நானும் சுழன்று மீண்டேன்
ஏமாற்றம் கொட்ட